முதலாளியுடன் உல்லாசமாக இருந்த வீடியோவை வைத்து வேலைக்கார பெண் செய்த அதிர்ச்சி செயல்..

தமிழகத்தில் முதலாளி உல்லாசமாக இருந்ததை வீடியோ எடுத்து பணம் பறித்த வேலைக்காரியை பொலிசார் தேடி வருகின்றனர்.

சென்னை திருவான்மியூர் புதிய கடற்கரை சாலையைச் சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் தன் குடும்பத்தினருடன் அங்கு வசித்து வருகிறார்.

இவருடைய வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு முன்பு சித்திரவள்ளி என்ற பெண் வீட்டு வேலைக்கு சேர்ந்துள்ளார். அவர் அந்த வீட்டிலே தங்கி வேலை பார்த்து வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு மனோஜ்குமாரின் மனைவி குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்போது மனோஜ்குமாருக்கும், சித்திரவள்ளிக்கும் இடையே நெருக்கம் ஏற்பட, இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் சித்திரவள்ளியை தேடி ஜீவா என்பவர் மனோஜ்குமாரின் வீட்டிற்கு வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த அவர் சித்திரவள்ளியுடன், மனோஜ் நெருக்கமாக இருப்பதை அறிந்து, அவரை மிரட்டி அவரிடம் 20 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2.20 லட்சம் பணத்திற்கான காசோலையை கேட்டு சித்திரவள்ளியை உடன் அழைத்து வாங்கி சென்றுள்ளார்.

அதன் பின் மீண்டும் மனோஜ்குமாரை போனில் தொடர்பு கொண்ட சித்திரவள்ளி, உடனடியாக ஒரு லட்சம் ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறி மறுத்தவுடன், இரண்டு பேரும் உல்லாசமாக இருந்ததை வீடியோவாக எடுத்துள்ளதாகவும், பணம் தரவில்லை என்றால் இரண்டு பேரும் உல்லாசமாக இருந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

அதன் பின்னரே அவருக்கு சித்திரவள்ளிக்கு இந்த பணம் பறிப்பு சம்பவத்தில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது. இதனால் உடனடியாக மனோஜ் குமார் அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்க, இது குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் தலைமறைவாகவுள்ள சித்திரவள்ளியை வலை வீசி தேடிவருகின்றனர்.