2019 ஐ.பி.எல் தொடரில் பெங்களூரு அணி தனது கடைசி போட்டியில் விளையாட உள்ள நிலையில், அந்த அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட வீடியோவை ஆர்.சி.பி அணி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல் தொடரில் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, தோல்விகள் காரணமாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறவில்லை. பெங்களூரு அணி தனது கடைசி லீக் போட்டியில் ஹைதராபாத் அணியை இன்று எதிர்கொள்கிறது.
இந்நிலையில், ஆர்.சி.பி அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரும் தங்கள் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து, தோல்விகளுக்கு மன்னிப்பும் கேட்டுள்ளனர். இவர்கள் மன்னிப்பு கேட்ட வீடியோவை ஆர்.சி.பி அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதில் டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘ஆர்.சி.பி ரசிகர்களுக்கு… நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. இந்த சீசனில் எங்களது ஆட்டம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருந்தது. அதற்கு மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம். தொடர்ந்து ஆதரவு அளியுங்கள்’ என தெரிவித்தார்.
அதேபோல் கோஹ்லி கூறுகையில், ‘இந்த சீசனில் கடைசிப் போட்டி. நிச்சயம் இந்த சீசன் எங்களுக்கு ஏமாற்றமான ஒன்று தான், உங்களுக்கும். 3 மணி நேரப் போட்டி முடிந்த பிறகு நீங்கள் மைதானத்தில் அமர்ந்திருந்து எங்களை உற்சாகப்படுத்துவீர்கள். அது எப்போது எங்களுக்கு சிறப்பான அனுபவமாகும். நீங்கள் தான் ஐ.பி.எல்-யின் சிறந்த ரசிகர்கள்’ என தெரிவித்துள்ளார்.
The last game of the season is here and @imVkohli and @ABdeVilliers17 want you guys to know what’s on their minds. #PlayBold pic.twitter.com/GddTgzy2Zp
— Royal Challengers (@RCBTweets) May 4, 2019