பதுளையில் பயங்கரம்..! தேயிலைச் செடிக்குள் துப்பாக்கிகள்… !!

பதுளை வெலிமடைப் பகுதியின் கிரின்ஹில் தோட்டப்பிரிவில் தேயிலைச் செடிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைத் துப்பாக்கிகள் இன்று காலை மீட்கப்பட்டன.தோட்டத்தில் கொழுந்து பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில், பொலித்தீன் பையால் சுற்றப்பட்ட பொதிக்குள் இருந்து துப்பாக்கிகள் மீட்கப்பட்டன.

சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.