ஐ.எஸ் பயங்கரவாதிகள் இலங்கையை தெரிவு செய்தமைக்கான காரணம் என்ன…?

தேசிய பாதுகாப்பு தொடர்பில் காணப்பட்ட பலவீனமே ஐ.எஸ் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக் காரணமாக அமைந்துள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக தெரிவித்துள்ளார்.

பலவீனத்தை பயன்படுத்திய ஐ.எஸ் பயங்கரவாதிகள் நாட்டில் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து இலங்கைக்குள் மாத்திரம் திட்டங்கள் வகுக்கப்படவில்லை. நிச்சயமாக இதில் வெளிநாட்டு சக்திகள் உள்ளன.வெளிநாட்டு சக்திகளின் வழிநடத்தலில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. நடந்துள்ள சம்பவத்தில் யார் தவறிழைத்தது என்ற காரணியை ஒருவர் மீது சுட்டிகாட்ட முடியாது.

இதில் சகல தரப்பினரும் பொறுப்புக்கூற வேண்டும். புலனாய்வுத்துறை தகவல் கிடைத்ததில் இருந்து அதன் பின்னர் இதனை கையாண்ட அனைவரும் பொறுப்பாளிகள் தான்.தேசிய பாதுகாப்பு விடயத்தில் சகலரும் அலட்சியமாக இருந்துள்ளனர். அரசியல்வாதிகளும் இதில் தமது கடமைகளை தவறவிட்டுள்ளனர்.தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு அடுத்து செய்ய வேண்டியவற்றை சரியான முறையில் கையாள வேண்டும் எனவும் இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.