வா பேபி திருமணம் செஞ்சுக்கலாம், த்ரிஷாவுக்கு அழைப்பு?

தமிழ் சினிமாவில் ஜோடி படத்தில் அறிமுகமான திரிஷா தனது 36வது வயதில் இதுவரை 60வதுக்கும் மேற்பட்ட படங்களை நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார்,இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் திரிஷாவுக்கு முன்னணி நடிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்

அந்தவகையில் நடிகை சார்மி த்ரிஷாவுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார்

இது குறித்த தனது ட்விட்டர் பதிவில், த்ரிஷா தன்னைக் கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படத்தை பதிவிட்டிருக்கும் சார்மி, பேபி எப்போதும் உன்னை விரும்புகிறேன். என் காதலை நீ ஏற்பாய் என்று முழங்காலிட்டு காதலரைப் போல் காத்திருக்கிறேன். திருமணம் செய்து கொள்ளலாம். இப்போது அது சட்டப்பூர்வமாகவும் அனுமதிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்