பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்த தடை!!!

நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ளமையினால், கொழும்பிலுள்ள பாடசாலைகளில் இன்று விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்தோடு நாளை பகல் 1 மணிக்கு பின்னர் பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுதாக்குதல்கள் காரணமாக 250இற்கும் அதிகமானோர் உயிரிழந்திருந்தனர்.

அதனைத்தொடர்ந்து மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.

நாட்டில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும் ஓரளவு சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது. நாளை மறுதினம் பாடசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில் பாடசாலைகளில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.