டெல்லியில் வசித்து வந்தவர் ராகுல் குமார் மிஸ்ரா. இவரது மனைவி பூஜா. இந்நிலையில் கடந்த மாதம் மிஸ்ரா மயங்கிய நிலையில் தனது மனைவியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.அங்கு அவருக்கு சிகிச்சை அளித்து கொண்டிருக்கும் பொழுதே அவர் பரிதாபமாக உயிரிழந்தார.
இந்நிலையில் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் அவர்களது வீட்டில் ‘என்னுடைய தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் அல்ல’ என எழுதப்பட்ட கடிதம் ஒன்று சிக்கியது.
இதனால் போலீசார்கள் விசாரணையை தீவிரப்படுத்தாத நிலையில், மருத்துவர்கள் அளித்த பிரேத பரிசோதனை அறிக்கையில் பூஜா கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தீவிர விசாரணையில் ஈடுபட்ட போலீசார் பூஜாவின் கணவர் மிஸ்ராவை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர் அப்பொழுது அவர் கூறியதாவது, மிஸ்ராவும் பத்மாஎன்பவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மிஸ்ரா பொறியியல் படிப்பிற்காக வேறு ஊருக்கு சென்று விட்ட நிலையில்சில ஆண்டுகளாக இருவரும் எந்த தொடர்பும் இல்லாமல் இருந்துள்ளனர்.
பின்னர் வாட்ஸ் ஆப் குரூப்பின் மூலம் மீண்டும் இருவரும் பழகியுள்ளனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்க தொடங்கியுள்ளனர். ஆனால் இவர்களது காதலுக்கு மிஸ்ரா பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து பூஜாவை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மிஸ்ரா பத்மா தனது தோழி என பூஜாவிற்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். பின்னர் நாளடைவில் இருவரும் காதலிப்பதை அறிந்த பூஜா இதுகுறித்து மிஸ்ராவிடம் சண்டைபோட துவங்கியுள்ளார்
இந்நிலையில் தங்களுக்கு இடையூறாக உள்ள பூஜாவை தீர்த்துக்கட்ட மிஸ்ரா மற்றும் பத்மா முடிவு செய்தனர். அதன்படி மிஸ்ரா வேலைக்கு சென்ற பிறகு வீட்டிற்கு வந்த பத்மா, ஜூஸில் எலி மருந்தை கலந்து பூஜாவை குடிக்க கூறியுள்ளார்.இந்நிலையில் பூஜா அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்துள்ளார்.
உடனே பத்மா பூஜாவின் தலையை பிடித்து சுவற்றில் ஓங்கி அடித்துள்ளார்.பின்னர் கழுத்தை நெரித்து உள்ளார் இதனை தொடர்ந்து பூஜா மயக்கமடைந்த நிலையில் மிஸ்ராவிற்கு போன் செய்துவிட்டு பத்மா அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து வீட்டிற்கு வந்த மிஸ்ரா ஒன்றும் தெரியாதது போல் மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் என்பது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து போலீசார் மிஸ்ரா மற்றும் பத்மா இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.