சினிமா ஆசை காட்டி சீரழிக்கப்பட்ட ஏழை மாணவி: திடுக்கிடும் தகவல்!

கன்னியாகுமரியில் மாணவிக்கு சினிமா ஆசை காட்டி, நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த நடன இயக்குனரை போக்ஸோ சட்டத்தின் கீழ் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவர் தீபம் தியேட்டர்ஸ் என்கிற பெயரில் இயங்கி வரும் நடன பள்ளியில் நடன இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.

இவருக்கு ஏழு வயதில் ஆண் குழந்தையும், 6 வயதில் பெண் குழந்தையும் உள்ளனர். இந்த பள்ளியில் நடனம் கற்றுக்கொள்வதற்காக வந்த மாணவி ஒருவருடன் அஜித்குமாருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவரும் பல கோவில் திருவிழாக்களில் நடனம் ஆடுவதற்கு ஒன்றாக சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மாணவியை சினிமாவில் ஹீரோயின் ஆக்குவதாகவும், தனக்கு பல துணை இயக்குனர்களையும் தெரியும் என ஆசை வார்த்தை காட்டியுள்ளார்.

இதில் மயங்கிய மாணவி அஜித்குமார் கூறும் அனைத்தையும் நம்பி அவருடன் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 25ந் தேதி மாணவியை தொடர்பு கொண்ட அஜித்குமார், துணை இயக்குநர்கள் உன்னை காண அழைத்துள்ளதாகவும், அதற்கான ஆடிஷன் நாளை நடைபெறுவதாகவும் கூறியுள்ளார்.

அதனை நம்பி கிளம்பிய மாணவியை திருச்செந்தூரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பலாத்காரம் செய்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களுக்கும் மாணவியை விருந்தாக்கியுள்ளார்.

பின்னர் மாணவியை சென்னை அழைத்து வந்த அவர், உனக்கு சரியாக நடிக்க வரவில்லை, மேடை நாடகங்களில் நடித்து பயிற்சி பெற வேண்டும் எனக்கூறி திருப்பி அனுப்பியுள்ளனர்.

அங்கிருந்து திருச்செந்தூர் திரும்பிய மாணவியை கலைஞர்கள் பலரும் சேர்ந்து பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையில் தன்னுடைய மகளை காணவில்லை என மாணவியின் தாய் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் தனிப்படை அமைத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டபோது, ராஜபாளையம் பகுதியில் உள்ள கோவில் திருவிழாவில், ராஜ்குமாருடன் மாணவி ஆபாச நடனமாடுவதாக தெரியவந்துள்ளது.

அங்கு அஜித்குமாரை சுற்றிவளைத்த பொலிஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் மாணவியை பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்மந்தமாக விசாரணை மேற்கொன்டு வரும் பொலிஸார், மாணவியை சீரழித்த மற்ற நண்பர்களையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.