இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தில் (21.04.2019) ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற நிலைமையினால் 05.05.2019 நாளை ஞாயிற்றுக்கிழமையும் திருப்பலிகள் கத்தோலிக்க தேவாலயங்களில் நடைபெறாது என கர்தினால் பேரருட்திரு மல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்.
இயேசு உயிர்த்து தூய ஆவி திருச்சபை மீது பொழியப்படும் வரை திருத்தூதர்கள் அச்சத்தினால் பயந்து ஒழித்திருந்ததைப் போன்று இன்றும் அச்சத்துடனும் பீதியுடனும் ஆலயங்களுக்கு செல்ல முடியாத அவலநிலை மீண்டுமோர் பெந்தக்கோஸ்தை எதிர்பார்க்கிறதா?
அனர்த்தங்கள் யுத்தங்களின் போது மக்களின் புகலிடமாக காணப்பட்ட ஆலயங்களும் பாடசாலைகளும் இன்று ஆபத்தை தருகின்ற இடங்களாக அடையாளப்படுத்தப்படுவதின் அவலம் ஆழ்மனதில் கீறல்களை ஏற்படுத்துகிறது.
இயேசுவைக் கொன்று விட்டால் கிறிஸ்தவத்தையே அழித்து விடலாம் என்று கருதியவர்கள் “கிறிஸ்துவையே சிலுவையில் அறைந்து கொலை செய்த பொழுது மரணிக்காத கிறிஸ்தவம்” இன்று கிறிஸ்தவர்களையும் கிறிஸ்தவ தலைவர்களையும் குண்டு வைத்து கொலை செய்வதால் அழிந்து விடுமென்று மனப்பால் குடிப்பவர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் .
கிறிஸ்தவர்கள் அழியலாம் ஆனால் கிறிஸ்தவம் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். ஏனெனில் கிறிஸ்துவை கொலை செய்ய எவராலும் முடியாது.
மரணத்தால் கூட இயேசுவை தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை. மூன்றாம் நாள் அவர் உயிர்த்தெழுந்தார்.
இயேசு நமக்காக கொல்லப்பட்டார் என்றால் இயேசுவுக்காக கொல்லப்பட கிறிஸ்தவர்கள் ஒருபோதும் பின்வாங்கமாட்டார்கள் என்பது கடந்த கால கலாபனைகள் நமக்குச்சான்று.
ஒரு கிறிஸ்தவனின் இரத்தம் பல கிறிஸ்தவர்களை நம்பிக்கை கொள்ளச் செய்யும். கிறிஸ்தவன் என்பதற்காக மட்டு நாம் கொல்லப்படுவோமானால் நாம் பாக்கியவான்களே.
“இயேசுவின் இரத்தம் ஜெயம்” “” கத்தர் நகரைக் காக்கா விட்டால் அதைக் காப்பவன் கண் விழிப்பது வீண் ”
முகநுால் அன்பர் ஒருவரின் உருக்கமான பதிவு