90 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பிய மருத்துவர்!

பாகிஸ்தானில் முசாபர் கங்காரோ என்ற மருத்துவர் 90 பேருக்கு எய்ட்ஸ் நோயை பரப்பியுள்ளது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பாகிஸ்தானின் லர்கானா மாவட்டத்தில் முசாபர் கங்காரோ என்ற மருத்துவர் தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார்.

எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட இவர், இவர் தன்னிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வந்த நோயாளிகளுக்கு ஊசி மூலம் எச்ஐவி கிருமியை பரப்பியுள்ளார்.

அதில் 65 பேர் குழந்தைகள் ஆவார். சுகாதாரத்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் மருத்துவரை பொலிசார் கைது செய்துள்ளனர். மருத்துவரின் இந்த செயல் அந்நாட்டு மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.