நரை முடியை கருப்பாக்க வேண்டுமா?

பொதுவாக சிலருக்கு இளம் வயதிலேயே முடி நரைத்து விடுகின்றது.

இதற்கு பலரும் கெமிக்கல் கலந்த டைகளை பயன்படுத்துவது தான் அதிகம். இது பல்வேறு பக்கவிளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

அந்தவகையில் இயற்கையான முறையில் நரை முடியை மறைக்க பீட்டூட் மிகவும் உதவி புரிகின்றது. தற்போது பீட்டூடை வைத்து எப்படி நரையை போக்குவது என்று பார்ப்போம்.

தேவையானவை
  • பீட்ரூட்- நடுத்த அளவு
  • காபி பொடி – 3 ஸ்பூன்
  • செம்பருத்தி – 10
  • எலுமிச்சை – சாறு
செய்முறை

முதலில் பீட்ரூட்டை துருவிக் கொள்ளுங்கள். அதனுடன் காபிப் பொடி மற்றும் செம்பருத்தி பேஸ்ட்டை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

200 மி.லி நீரை எடுத்து அதனுடன் பீட்ரூட் கலவை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.கலவை 50 மி.லி அளவு சுண்டும் வரை கொதிக்க வைத்தால் அடர் நிறம் உண்டாகும்.

சூடு ஆறியதும் அதனுடன் எலுமிச்சை சாறை கலந்து இந்த கலவையை தலையில் தேய்க்கவும். 1 மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்து நன்றாக காய விடுங்கள்.

பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசுங்கள். இவ்வாறு வாரம் ஒருமுரை செய்துவந்தால் கூடிய விரைவில் நரைமுடியை கருமையாக மாற்றலாம்.