4 வது குழந்தைக்கு தயாராகும் இளவரசி கேட்!

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடைய முதல் குழந்தையை பெற்றுக்கொள்ளவிருக்கும் வேளையில், இளவரசி கேட் 4வது குழந்தைக்கு தயாராகிக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பிரித்தானிய இளவரசி மேகன் தன்னுடைய முதல் குழந்தையை எதிர்பார்த்து காத்திருக்கிறார். இன்னும் சில தினங்களில் குழந்தை பிறந்துவிடும் என அரண்மனை விசுவாசிகள் அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இதனால் அரச குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் திளைத்திருக்க, மற்றொரு செய்தியாக இளவரசி கேட் 4வது குழந்தைக்கு ஆயத்தமாகி வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதுகுறித்து அவருடைய நண்பர் ஒருவர் கூறுகையில், கடந்த காலத்தில் குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு வரும் கடுமையான விடியல் நோயால் கேட் அவதிப்பட்டிருந்தாலும், அவர் இன்னும் குழந்தைகளை நேசிக்கிறார். மற்றொரு கர்ப்பத்தின் மூலமாக தன்னைத் தானே தயார்படுத்துகிறார்.

தன்னுடைய தாய் கரோல் மிடில்டன் போல மூன்று குழந்தைகளை மட்டுமே பெற்றுக்கொண்டிருக்கிறார் என பலரும் நினைத்திருந்த வேளையில், அரண்மனை விசுவாசிகளுக்கு ஆச்சர்யம் அளிக்கும் வகையில் கேட் 4வது குழந்தைக்கு தயாராகி வருகிறார்.

37 வயதில் தன்னுடைய முதல் குழந்தை என 4 குழந்தைகளை பெற்றெடுத்த ராணியை தான் கேட் உதாரணமாக எடுத்துக்கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் அரச பயணமாக வடஅயர்லாந்து சென்றிருந்த கேட், அங்கு ஒரு 5 மாத குழந்தையை பார்த்ததும், மற்றொரு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை தனக்கு தோன்றுவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.