தலைமுடி பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக வெங்காயம் உள்ளது. அதற்கு வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் காரணம்.
ஆய்வு ஒன்றில், வெங்காயத்தில் உள்ள சல்பரானது தலை முடி உதிர்வால் ஏற்படும் வழுக்கைத் தலையில் முடி வளர உதவுவது தெரிய வந்துள்ளது.
எனவே உங்களுக்கு முடி அதிகம் உதிர்ந்து, குறைந்தது போல் காணப்பட்டால், வெங்காயத்தை தலைமுடி குறைவாக இருக்கும் இடத்தில் பயன்படுத்தி வாருங்கள்.
இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சி மற்றும் வலிமையை அதிகரிக்க வெங்காயத்தை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து வந்தால், நிச்சயம் உங்கள் தலை முடி வளர்வதை காணலாம்.
வெங்காய சாறு தயாரிப்பு
- வெங்காயத்தை மிக்ஸியில் போட்டு அரைத்து சாறு எடுக்கவும்.
- அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.