பெயர்களை மாற்றம் செய்ய விண்ணப்பித்துள்ள முஸ்லிம்கள்!

27 முஸ்லிம்கள் வத்தளை பிரதேச செயலகத்தில் தமது பெயரை மாற்றவதற்கான விண்ணப்பங்களை செய்துள்ளதாக தெரியவருகிறது.

மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டி சிங்கள ஊடகமொன்று இன்றைய தினம் செய்தி வெளியிட்டுள்ளது.

அந்த செய்தியில் மேலும், முஸ்லிம் பெயர்களுக்கு பதிலாக சிங்கள பெயர்களை சூட்டிக்கொள்ள இவர்கள் விண்ணப்பம் செய்துள்ளனர்.

சில வாரங்களுக்கு முன்னர் முஸ்லிம்கள் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமைகளை அடுத்து முஸ்லிம்கள் தமது பெயர்களை மாற்ற முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.