பாதுகாப்புகளுக்கு மத்தியில் அரச பாடசாலைகள் ஆரம்பம்! சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு

நாட்டில் நிலவிய அசாதாரண நிலை காரணமாக முப்படைகளின் சோதனை நடவடிக்கைகளுடன் அரச பாடசாலைகளில் தரம் 6லிருந்து 13ஆம் தர மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று கல்வி செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பமாககியுள்ளது.

இதேவேளை தரம் 1 தொடக்கம் தரம் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

உயிர்த்த ஞாயிறன்று தேவாலயங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதலின் பின்னர் நாட்டில் பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறிப்பாக பாடசாலைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் நாடளாவிய ரீதியில் கடந்த ஒருவார காலமாக அனைத்து பாடசாலைகளினதும் பாதுகாப்பு குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி பாதுகாப்பு கருதி பிற்போடப்பட்ட இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.

பாடசாலை சேவை வாகனங்ளை நிறுத்தவதற்கான விசேட தரிப்பிடங்கள்

பாடசாலைகள் ஆரம்பமானவுடன் அருகில் தேவையற்ற வாகனங்கள் நிறுத்துவதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் பாடசாலை சேவைக்குரிய பஸ் மற்றும் வேன்கள் என்பவற்றை நிறுத்துவதற்கான விஷேட தரிப்பிடங்கள் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் வானங்களை நிறுத்துவதற்கு குறித்த பிரதேசத்தின் பொலிஸ் பிரிவில் அனுமதி பெற வேண்டும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவண் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய கொழும்பிலுள்ள பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பாடசாலைகளின் வாகனஙக்களை எந்தெந்த இடங்களில் நிறுத்த வேண்டும் என்ற அட்டவணையை பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ளது.