நள்ளிரவில் நடந்த போதை விருந்து… 160 ஐடி ஊழியர்கள் கைது!

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் சட்டவிரோதமான மது விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட 7 பெண்கள் உட்பட 160 ஐடி ஊழியர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பிரபல தனியார் விடுதியில், சட்டவிரோதமான முறையில் மது விருந்து நடைபெறுவதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விடுதியை சுற்றிவளைத்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது கஞ்சா, மது உள்ளிட்ட சட்டவிரோதமான போதை பொருட்கள் இரவு விருந்தில் கைப்பற்றப்பட்டது. மேலும், அந்த விருந்தில் பங்கேற்க ஆன்லைனில் முன்பதிவு செய்ததும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து விருந்தில் பங்கேற்ற 7 பெண்கள் உட்பட 160 ஐடி ஊழியர்களை பொலிஸார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர்.

தற்போது அவர்கள் அனைவரும் மாமல்லபுரத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.