அமெரிக்காவில் எரிமலைக்குள் தவறி விழுந்த நபர் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹவாய் மாகாணத்தில் உள்ள உலகின மிக பயங்கரமான எரிமலைகளில் ஒன்றான கிலுலா எரிமலையில் இச்சம்பவம் நடந்துள்ளது.
கிலுலா எரிமலையை பார்வையிட ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இப்பகுதிக்கு வருகை தருவது வழக்கம். அவ்வாறு பார்வையிட வந்த 32 வயதுடைய சுற்றுலா பயணி ஒருவர் எரிமலைக்கு மிக அருகில் சென்று பார்வையிட்டுள்ளார். அப்போது அவரது கால் தவறி எரிமலைக்குள் விழுந்துள்ளார்.
தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த அவசர சேவை துறையினர் இரண்டரை மணி போராட்டத்திற்கு பிறகு 70வது அடி ஆழத்தில் செங்குத்தான விளம்பில் இருந்த நபரை கண்டறிந்து உயிருடன் மீட்டுள்ளனர்.
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட நபர் பாதுகாப்பு துறை ஹெலிகாப்டர் உதவியுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சைக்கு பின்னர் பாதிக்கப்பட்ட நபரின் உயிருக்கு ஆபத்தில்லை என மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.