தமிழ் சினிமாவில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ராய் லட்சுமி. இதனை தொடர்ந்து அவர் குண்டக்க மண்டக்க, தர்மபுரி, நெஞ்சைத் தொடு, வெள்ளித்திரை, ரகசிய ஸ்நேகிதனே, முத்திரை, வாமனன் ஆகிய பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடித்த காஞ்சனா படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அவர் பெருமளவில் பிரபலமானார். மேலும் இவர் தமிழ் மட்டுமின்றி ஹிந்தி கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
Here’s the glimpse of #Cinderella MOTION KEY VISUAL
Use Earphones ? for 3D SOUND#HBDRaaiLaxmi #happyBirthdayToMe ?? hope u guys enjoy it ?? much love ? https://t.co/5YfJ5mD6EK pic.twitter.com/rtMd3RLm6b
— RAAI LAXMI (@iamlakshmirai) 5 May 2019
இந்நிலையில் ராய் லட்சுமி தற்பொழுது இயக்குனர் வினோ வெங்கடேஷ் இயக்கும் சின்ரெல்லா என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும் பேய் பட பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் மோஷன் வீடியோ நேற்று ராய் லட்சுமியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மேலும் இப்படத்தில் அழகிய சின்ட்ரெல்லாவாக வரும் நடிகை ராய் லட்சுமி திடீரென கொடூர பேயாக மாறுகிறார். இதனை கண்ட ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.