பயணிகளை காப்பாற்ற விமான ஊழியர் செய்த தியாகம்!!

ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ ஷெர்மெட்யெவோ விமான நிலையத்தில் இருந்து இந்திய நேரப்படி காலை 3 மணியளவில் ஏரோஃப்லோட்எஸ்யூ 1492 ரக விமானம் கிளம்பியது. மேலும் அந்த விமானத்தில் 78 பயணிகள் மற்றும் 5 விமான பணியாளர்களும் பயணம் மேற்கொண்டனர்.

ஆனால் விமானம் கிளம்பிய சிறிது நேரத்தில் விமானத்தில் கோளாறு இருப்பது கண்டறியப்பட்டு விமானம் அவசர அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது.

மேலும் விமானம் தரையிறங்கி ஓடு பாதையில் சென்று கொண்டிருக்கும் போதே திடீரென விமானத்தில் தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதையடுத்து விமானத்தின் அவசர வழியின் மூலமாக பயணிகள் வேக வேகமாக வெளியேற்றப்பட்டனர். எனினும் விமானம் முழுவதும் தீ வேகமாக பரவத் தொடங்கியது.

இதில் விமானத்தில் பயணம் செய்த 2 குழந்தைகள் உட்பட 41 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.இந்நிலையில் இந்த விபத்தின் போது ஊழியரான மாக்ஸிம் மோய்சி என்பவர் பயணிகள் உயிர்பிழைப்பதற்காக உதவிய நிலையில், பரிதாபமாக தீயில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

இது குறித்து இந்த சம்பவத்தை நேரில் கண்டவர்கள் கூறுகையில், மாக்ஸிம் மோய்சி விமானத்தின் பின்புறம் இருந்த பயணிகளை காப்பாற்றுவதற்காக உதவி செய்து கொண்டிருந்தார்.

ஆனால் கடைசியில் அவர் தீயில் மாட்டி இறந்துவிட்டார். மேலும் இதுதான் அவர் விமானத்தில் ஊழியராக சேர்ந்த முதல் பயணம், அதுவே அவருக்கு கடைசி பயணமாக மாறிவிட்டது என கூறியுள்ளனர்.