இத்தாலியின் Mussomeli நகரின் கைவிடப்பட்ட குடியிருப்புகளை தலா ஒரு யூரோவுக்கு விற்பனை செய்ய நகர நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
முதற்கட்டமாக 100 வீடுகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ள நிர்வாகம், வரவேற்பு இருக்கும் என்றால் மேலும் 400 வீடுகளை இதேபோன்று விற்பனைக்கு விடுக்க உள்ளது.
சில வீடுகள் மிகவும் சிறிதாக உள்ளது. ஆனால் இந்த வீடுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் புதுப்பிக்க வேண்டும்.
புதுப்பிக்காத விடுகளை நகர நிர்வாகம் திரும்ப பெற்றுக்கொள்ளும் எனவும், அதற்காக முன்பணமாக செலுத்தியுள்ள 8,000 டொலர் தொகையை வாடிக்கையாளர்கள் இழக்க நேரிடும்.
இங்குள்ள குடியிருப்புகளை புதுப்பிக்க சதுர அடி ஒன்றுக்கு 107 டொலர் செலவாகும் எனவும் நிர்வாக செலவுகள் 4,000 முதல் 6,450 டொலர் எனவும் கூறப்படுகிறது.