தமிழகத்தில் கத்திரி வெயில் ஆரம்பித்துள்ள நிலையில், அனைத்து பகுதிகளிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. திருப்பூரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை பெய்த கன மழையில் நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரதான சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் மழை பெய்வதற்கு முன்னர் பலத்த காற்றுடன் சூறாவளி காற்று வீசியதில், கூலிபாளையம் பகுதியில் உள்ள கடை எண் 34, 39 பாரில் மேற்கூரைகள் பலத்த காற்றுக்கு பறந்து செல்லும் காட்சி அங்குள்ள சிசிடிவி இல் பதிவாகிய உள்ளது. மேலும் நகரின் பல்வேறு பகுதிகளில் ஆலங்கட்டி யுடன் கூடிய மழை பெய்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் நேற்று பெய்த மழையால் திருப்பூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.