இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பல அநீதிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான பிரச்சனைகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். பெண்களுக்கு தெரியாத நபர்களில் இருந்து சொந்த கணவரும் கொடுமை இளைக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது.
இந்தியாவில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் மொஹாலி பகுதியில் கணவருடன் வசித்து வந்த இளம்பெண் ஒருவர் அங்குள்ள காவல் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் இவரது புகார் குறித்த நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்பதால் சில நாட்கள் காத்திருந்த இவர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்துள்ளர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்த பெண் தனக்கு நடந்த அநீதிகளை கூறி கதறியளவே., இவரின் புகாரை ஏற்ற காவல் கண்காணிப்பாளர் உடனடியாக இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார். இது குறித்த பெண் புகாரில் தெரிவித்ததை கேட்டு காவல் அதிகாரி அதிர்ச்சியானார்.
அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது., எனது கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையான நிலையில்., இந்த வாய்ப்பை உபயோகம் செய்யும் நோக்கத்தில் எனது மாமனார்., அவரது சகோதர்ரகள் மற்றும் கணவரின் சகோதரர்கள் என்று அனைவரும் என்னை பாலியல் பலாத்காரம் செய்ய திட்டமிட்டனர்.
இவர்களின் திட்டப்படி சம்பவத்தன்று எனக்கு மயக்க மருந்து கலக்கப்பட்ட பாலினை வழங்கி குடிக்க வைத்து., நான் மயங்கியதும் என்னை அனைவரும் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர். மயக்கத்தில் இருந்து நான் எழுந்ததும் இது குறித்து அவர்களிடம் முறையிட்ட சமயத்தில் கொலை செய்து விடுவதாக மிரட்டி., மேலும் பல முறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினர்.
இது குறித்து எனது கணவரிடம் தெரிவித்த சமயத்தில் அவர் ஏதும் கேட்காததால்., அவரின் முன்னிலையிலேயே என்னை பல முறை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தனர். இதனால் எனது தாயாரின் இல்லத்திற்கு அவர்களிடம் இருந்து தப்பித்து வந்தேன் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.