இந்த உலகில் பெண்களுக்கு எதிரான பல தொடர் அநீதிகள் நடைபெற்று வருகிறது. தினமும் பல்வேறு விதமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பெண்கள் தங்களின் வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர்.
பிறந்த பெண் குழந்தைகளில் இருந்து இறக்கும் தருவாயில் இருக்கும் பெண்கள் வரை அனைவரும் பல அநீதிகளை சந்திக்கும் நிலையில் இன்று காலம் மாறியுள்ளது. சொந்த கணவரால்., தந்தையால்., தாயால் அரங்கேறிய பல கொடூர சம்பவங்களின் உண்மைகளை நாம் அறிந்து கொண்டு இருக்கும் நிலையில்., அடுத்தடுத்த சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் உள்ள டெல்லி நகரில் வசித்து வரும் நபரின் பெயர் தர்மேந்திரா சர்மா. அங்குள்ள அகமதாபாத்தை சார்ந்த பெண்மணி பிரியங்கா திவாரி. இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிக்க முடிவு செய்யப்பட்டு., கடந்த சில நாட்களுக்கு முன்னதாக திருமணம் நடைபெற்று முடிந்தது.
இந்த நிலையில்., திருமணம் முடிந்து இருவரும் அவர்களின் இல்லத்திற்கு திரும்பிய நிலையில்., தர்மேந்திரா சர்மா பிரியங்காவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் ஆத்திரமடைந்த பிரியங்கா இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர்., இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட சமயத்தில்., திருமணம் முடிந்த இரவில் முதலிரவுக்காக அனைத்தும் தயார் செய்யப்பட்டு இருந்த நேரத்தில்., பிரியங்கா கடுமையான சோர்வால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில்., அவர் தாம்பத்தியத்திற்கு மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் அவர் அடித்துள்ளது தெரியவந்தது.