பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பை வழங்கி விடுதலை செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் எம்.ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா, ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
இனங்களுக்கு இடையில் ஒற்றுமையை அதிகரிக்க இந்த சந்தர்ப்பத்தில் ஞானசார தேரர் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் ஆளுநர் கூறியுள்ளார்.
அதேவேளை எதிர்வரும் வெசாக் பௌர்ணமி தினத்திற்கு முன்னர் ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு முன்னாள் அமைச்சர் விஜேதாச ராஜபக்சவும் ஜனாதிபதிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
ஞானசார தேரரின் நலன் விசாரிக்க சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியிருந்தார்.
நீதிமன்றத்தை அவமதித்த வழக்கில் மேன்முறையீட்டு நீதிமன்றம் ஞானசார தேரருக்கு ஆறு ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது. இந்த தீர்ப்பை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியிருந்தது.