இவருக்கு இளவரசர் ஹரியின் மகனின் பெயர் தெரியும், ஆனால் சொல்ல மாட்டாராம்: ஏன் தெரியுமா?

பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவியான மேகனின் தோழி ஒருவருக்கு புதிதாக பிறந்துள்ள குட்டி இளவரசரின் பெயர் தெரியுமாம்.

மேகனின் நெருங்கிய தோழியும் பிரபல பாடகியுமான Sophie Ellis-Bextor, தனக்கு குட்டி இளவசரின் பெயர் தெரியும் என்று கூறியுள்ளார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கு பெற்ற Sophieயிடம், மேகன் உங்கள் பாடல்களின் ரசிகை என்பது எங்களுக்கு தெரியும், நீங்கள் மிகவும் நெருங்கிய தோழிகள் என்பதும் எங்களுக்கு தெரியும், அப்படியிருக்கும்போது உங்களுக்கு மேகனின் மகனின் பெயர் தெரியுமா? என்று கேட்கப்பட்டது.

எனக்கு தெரியுமே என்று கூறிய Sophie, ஆனால் நான் அதை உங்களிடம் சொல்வேன் என்று நினைத்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் மிஞ்சும் என்றார்.

தனக்கு மேகனின் குழந்தையின் பெயர் தெரியும் என்று கூறிய Sophie, ஆனால் அதை ரகசியமாக வைத்திருக்கும்படி மேகன் தன்னிடம் சத்தியம் வாங்கியுள்ளதாக தெரிவித்தார்.