கிழக்கு ஜேர்மன் நகரம் ஒன்றிலுள்ள பாதிரியார் ஒருவர் விமர்சனங்களுக்கு மத்தியிலும் அகதிகளுக்கு உதவி வருகிறார்.
2015ஆம் ஆண்டு ஏராளமான அகதிகள் கிழக்கு ஜேர்மன் நகரமான Leipzig நகருக்கு வந்து சேர்ந்தார்கள்.
அப்போதிருந்தே Leipzig நகரிலுள்ள திருச்சபை ஒன்றின் பாதிரியாரான ஆண்ட்ரியாஸ் அவர்களுக்கு உதவி வருகிறார்.
புதிதாக வரும் அகதிகளுக்கு வீடுகளைக் கண்டு பிடித்தல், அலுவலகங்களுக்கு அழைத்துச் செல்லுதல், ஜேர்மன் மொழியைக் கற்றுக் கொடுத்தல் ஆகிய உதவிகளை அவர் செய்து வருகிறார்.
ஆனால் பலர் அவரை விமர்சிக்கிறார்கள், நீங்கள் தவறான மக்களுக்கு உதவுகிறீர்கள் ஜேர்மானியர்களுக்குதான் நீங்கள் முதலில் உதவ வேண்டும் என்கிறார்கள் அவர்கள்.
ஆனால் தனது சபை தனக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவிக்கிறார் ஆண்ட்ரியாஸ். அவரது சபையார் அகதிகளும் ஜேர்மானியர்களும் கூடி பழகும் வகையில் காபி ஷாப் ஒன்றை நடத்தி வருகின்றனர்.
பல இடங்களில் முன்னைவிட தற்போது அகதிகளுக்கு பிரச்சினைகள் உள்ளபோதிலும் ஆண்ட்ரியாஸின் சபையார் நடத்தும் காபி ஷாப்பில் தாங்கள் சுதந்திரமாக உணர்வதாக தெரிவிக்கிறார்கள் அகதிகள்.