இலங்கை குண்டு வெடிப்பில் மகள்களை பறிகொடுத்த தாய்… கண்ணீர் மல்க பேட்டி

இலங்கை குண்டு வெடிப்பில் குழந்தைகள் மற்றும் கணவனை பறிகொடுத்து நிற்கு பெண், தன் குழந்தையின் ஆசை என்ன என்பதை மிகுந்த வேதனையுடன் கூறியுள்ளார்.

ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலினால் 250-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் தற்போது வரை சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலில் ஏராளமானோர் தங்கள் உறவினர்களை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில் நீர்கொழும்புவைச் சேர்ந்த சண்டிமா நிரன்சலி யசவர்தீனா என்ற பெண் ஒருவர் கணவர் மற்றும் தன்னுடைய குடும்பத்தையே இழந்து தனி ஒரு பெண்ணாக மிகுந்த வேதனையில் உள்ளார்.

அவரிடம் பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று பேட்டி எடுத்த போது தன் மகளின் கனவு இது தான் என்பதை மிகுந்த வேதனையுடன் கூறியுள்ள்ளார்.

இதை என்னால் எப்படி கூறுவது என்றே தெரியவில்லை. எல்லா மருத்துவமனைக்கு ஓடினேன். அதை எல்லாம் விளக்க முடியாது. என்னால் இதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

என்னுடைய மூத்த மகள் நன்றாக படிப்பாள், அவளுக்கு டாக்டர் ஆக வேண்டும் என்பது தான் கனவு, அவள் தன் வாழ்க்கையில் மிகப் பெரிய கோல் ஒன்றை நிர்ணயித்திருந்தாள், பெரிதாக வீடு கட்ட வேண்டும்.

நன்றாக படித்து வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்று இருந்தாள்.

அதே சமயம் தன்னுடைய இளைய மக்கள் நன்றாக நடனம் ஆடுவார், அவளுக்கு நடனம் என்றால் மிகவும் பிடிக்கும் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.