ஐ.எஸ் பயங்கரவாதம் மூலம் இலங்கையை அழிக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதா?

ஐ.எஸ் பயங்கரவாதிகள் மூலம் இலங்கையில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தின் அடிப்படையிலேயே கடந்த மாத இறுதியில் இலங்கையில் தற்கொலை தாக்குதல் மேற்கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தெரியாமலேயே அவர்களை நுட்பமாக பயன்படுத்தி பல நாடுகளில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தும் செயற்பாட்டினை அமெரிக்க புலனாய்வு பிரிவான CIA மேற்கொண்டு வருகிறது.

ஐ.எஸ், தலிபான், அல்கைதா போன்ற தீவிரவாதிகளினால் ஸ்திரமற்ற நிலைக்குள்ளான அனைத்து நாடுகளிலும் அமெரிக்காவின் தூதுவராக, இலங்கைக்கான சமகால அமெரிக்க தூதுவர் செயற்பட்டுள்ளார்.

சிரியா, லிபியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலும் இவர் அமெரிக்க தூதுவராக செயற்பட்டுள்ளார்.

இன்று நாட்டினுள் ஏற்பட்டுள்ள அவசர நிலையில் சர்வதேச ஆதரவு வழங்குவதாக தெரிவித்து நாட்டினுள் அமெரிக்கா நுழைய முயற்சிக்கின்றது.

இலங்கையை இன்னுமொரு சிரியா, லிபியா போன்று மாற்றுவதற்கான தேவை அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை தாக்குதல்கள் காரணமாக முழு இலங்கையும் ஸ்தம்பிதமடைந்தது. இதனை பயன்படுத்தி அமெரிக்க இராணுவம் மற்றும் FBI குழுவினர் இலங்கைக்குள் புகுந்துள்ளனர்.

ஸ்திரமற்ற நிலையிலுள்ள இலங்கை நேடோ இராணுவ முகாம் ஒன்றை அமைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளதாக வீரவன்ச தெரிவித்துள்ளார்.