இலங்கை ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதலில் சுமார் 200 குழந்தைகள் அனாதையாக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த பயங்கரவாத தாக்குதலால் சிலரது குடும்பங்கள் அவர்களது வருவாய் ஆதாரத்தை இழந்ததாகவும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் கவலை தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி குறிப்பிட்ட சில குடும்பங்கள் போதிய சேமிப்பு இல்லை எனவும், அவர்கள் இந்த சோகத்தில் இருந்து மீள நிதி ஆதாரம் இன்றி தவித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 500 பேர் காயமடைந்து சிகிச்சையில் உள்ளனர். இது சுமார் 75 குடும்பங்களின் உறுப்பினர்கள் என கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் சிலர் இனிமேல் தொழிலுக்கு செல்ல முடியாத அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சிலர் காயம் காரணமாக உடல் உழைப்பில் மீண்டும் ஈடுபட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
தாக்குதல் தந்த அதிர்ச்சியில் இருந்து இன்னமும் மீளாத பல குடும்பங்கள் உள்ளதாகவும், அவர்களின் உளவியல் சிகிச்சைக்கு இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் உதவி வருவதாகவும் தெரியவந்துள்ளது.