தற்போது கோடை கால விடுமுறை என்ற காரணத்தால் சுற்றுலா தளங்களில் அதிகளவில் மக்கள் தங்களின் குடும்பத்துடன் வந்து செல்வது வழக்கம். இந்த நேரத்தை உபயோகப்படுத்தும் சமூக விரோதிகள்., சுற்றுலா பயணிகளிடம் கைவரிசையையும் காட்டுவது வழக்கம்.
இந்த காரணத்தால் காவல் துறையினர் தங்களின் கண்காணிப்பு பணியை மேலும் தீவிரப்படுத்துவது வழக்கம்., அந்த வகையில்., கன்னியாகுமரி பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு அதிகளவு மக்கள் வந்து செல்வது வழக்கம்.
கன்னியாகுமரி பகுதியில் இருக்கும் அனைத்து இடங்களிலும் காவல் துறையினர் அதிகளவு ரோந்து பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில்., மாறுவேடத்திலும் தங்களின் பணியை செய்து வருகின்றனர். இந்த சமயத்தில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இந்த தகவலை அறிந்த காவல் துறையினர் பொதுவாக கன்னியாகுமரி பகுதிக்கு அதிகளவு வெளி மாநிலத்தவர்கள் மற்றும் வெளி நாட்டவர் வருகை தருவது வழக்கம் என்ற காரணத்தால்., அங்குள்ள பகுதியில் தீவர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
காவல் துறையினர் தீவிரமான கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த சூழலில்., நேற்று இரவில் அங்குள்ள தனியார் விடுதிக்கு முன்னதாக விபச்சார புரோக்கர் சுற்றுலா பயணிகளை அழைத்து உல்லாசம் வேண்டுமா? என்ற கேள்வியை முன்வைத்த வாறு இருந்துள்ளான்.
இந்த தகவலானது காவல் துறையினருக்கு தெரியவரவே., தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் தனியார் விடுதிக்கு முன்னர் இருந்த சத்யன் (வயது 52) என்ற புரோக்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும்., அந்த தனியார் விடுதியில் சோதனை செய்ததில் அரை குறை ஆடையுடன் பெண் ஒருவர் இருந்ததும் தெரியவந்ததை அடுத்து., அந்த பெண்ணையும் காவல் துறையினர் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.