இளம் பெண்கள் மற்றும் மாணவிகளின் சகோதரத்துவ நட்பின் மூலம் வாழ்க்கையை சீரழித்த காம கொடூரன்!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள வீரப்பன்சத்திரம் காந்தி நகர் பகுதியில் கல்லூரியில் பயின்று வரும் மாணவி ஒருவர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கல்லூரி இடைவெளி நேரத்தில் கல்லூரிக்கு எதிரில் இருக்கும் கடைக்கு வந்து செல்வது வழக்கம். அந்த நேரத்தில்., அங்குள்ள வில்லரசம்பட்டியை சார்ந்த இராதாகிருஷ்னன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கமானது இவர்களுக்குள் நல்ல நிலையில் இருந்து வந்த நிலையில்., இராதாகிருஷ்ணன் திருமணம் முடிந்த நபர் என்ற காரணத்தால் மாணவி சகோதரத்துவ நட்புடன் பழகி வந்துள்ளார்.

இந்த நேரத்தில் மாணவியிடம் தனக்கு பிறந்தநாள் என்று கூறி சேலம் மாவட்டத்தில் உள்ள ஏற்காடு பகுதிக்கு அழைத்து சென்று சுற்றிப்பார்த்து வந்துள்ளனர். இந்த நிலையில்., மாணவியுடன் அந்த சமயத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்டு வீடியோ காட்சிகளாக பதிவு செய்து., இணையத்தில் பரப்பி விடுவதாக மாணவியை தீடீரென மிரட்டியுள்ளான். இதனால் பயந்துபோன மாணவியை மிரட்டி வலுக்கட்டாயமாக அங்குள்ள ஈரோடு பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இருக்கும் விடுதிக்கு அழைத்து சென்று பலவந்தப்படுத்தி பலாத்காரம் செய்துள்ளான். மேலும்., இந்த காட்சிகளை அலைபேசியில் பதிவு செய்து வைத்து பின்னர் அந்த விடியோவை காண்பித்தே சுமார் நான்கு வருடங்கள் தொடர்ந்து பல முறை பாலியல் வன்கொடுமைக்கும் உட்படுத்தியுள்ளான்.

இதுமட்டுமல்லாது மாணவியின் அலைபேசியில் இருந்த அவரது தோழிகளின் எண்ணிற்கும் தொடர்பு கொண்டு சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளான். இந்த காரணத்தால் மாணவி சுமார் இரண்டு முறை கர்ப்பமடைததும்., கர்ப்பமடைந்ததை நயவஞ்சகனிடம் கூறவே காருக்குள் வைத்து தாலியை கட்டி மருத்துவமனைக்கு அழைத்து சென்றும்., கருக்கலைப்பு மாத்திரை வாங்கி வழங்கி உட்கொள்ள வைத்தது கருக்கலைப்பு செய்ததும் தெரியவந்துள்ளது. மாணவியின் நடவடிக்கையில் இருந்த செயல்பாடுகளின் வித்தியாசத்தை கண்ட பெற்றோர் அவரிடம் விசாரித்த போது., தனக்கு நடந்ததை கூறியுள்ளார்.

இதனை கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளான பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து., இவர்களின் புகாரை ஏற்ற காவல் துறையினர் ராதாகிருஷ்ணின் மீது வழக்குப்பதிவு செய்து., விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பான விசாரணையில்., பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்த வண்ணம் உள்ள நிலையில்., இராதாகிருஷ்ணனின் மீது பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்., புகார் அளித்த பெண்ணை சுமார் நான்கு வருடங்கள் தொடர்ந்து பாலியல் ரீதியிலான துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதும் தெரியவந்துள்ளது.

புகார் அளித்த வீரப்பன்சத்திரத்தை சார்ந்த பெண்ணிற்கு அதே பகுதியை சார்ந்த நபருடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்று வந்தது. இந்த நிலையில்., எனக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில்., எனது கணவர் மது அருந்தும் பழக்கத்தை வைத்திருந்தார். அவ்வாறு மது அருந்தும் சமயத்தில் எனது கணவருக்கும் அவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கத்தை அடுத்து., அடிக்கடி வீட்டிற்கு வந்து செல்லும் பழக்கத்தை வைத்திருந்தான். இந்த சமயத்தில்., எனக்கும் எனது கணவருக்கும் இடையே பிரச்சனையை உண்டாக்கி பின்னர் நல்லவர் போல நடிப்பார்.

இந்த நிலையில்., எனது குடும்பத்தின் ஏழ்மையை உணர்ந்து அனுதாபத்தை ஏற்படுத்துவது போலவே இல்லத்திற்கு எனது கணவருடன் அடிக்கடி வருகை தந்து உதவி செய்வது போல நடித்து இருந்தார். இந்த சூழ்நிலையில்., ஒரு நாள் எனது கணவர் அதிக போதையில் இருந்ததை அறிந்து வீட்டிற்குள் வந்து பலவந்தமாக என்னை கற்பழித்தார். இந்த செயலை தொடர்ந்து மிரட்டி செய்து வந்த நிலையில்., இது குறித்து வெளியே கூற இயலாமல் அவதியடைந்து வந்த நிலையில்., இது குறித்த செய்தியை நாளிதழில் கண்டேன். அவன் மீது தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தனது புகார் மனுவில் கூறியிருந்தார்.

இந்த நேரத்தில்., இந்த விவகாரம் தொடர்பாக ராதாகிருஷ்ணின் மனைவியிடம் கேட்கப்பட்ட சமயத்தில் அவர் தெரிவித்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கடந்த 10 வருடங்களில் ஏராளமான கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்களை மிரட்டி ராதாகிருஷ்ணன் பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும்., இதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்தது. மேலும்., கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னதாக இளம்பெண் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த சமயத்தில்., அவரை மிரட்டி அனுப்பியதாகவும் தெரிகிறது. இது குறித்த தீவிர விசாரணையில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.