ஊருக்கு சென்ற மனைவி., வீட்டு வேலைக்காரியுடன் உல்லாசம்.!

சென்னையில் இருக்கும் திருவான்மியூர் பகுதியில் உள்ள புதிய கடற்கரை சாலையில் மனோஜ் குமார். இவர் தனது குடும்பத்துடன் அங்குள்ள பகுதியில் வசித்து வருகிறார். இவரது இல்லத்தில் சித்திர வள்ளி என்ற பெண்., வீட்டிலேயே தங்கி பணியாற்றி வந்துள்ளார்.

மனோஜ் குமாரின் மனைவி மற்றும் அவரது குழந்தைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்னதாக சொந்த ஊருக்கு சென்றுவிட்ட நிலையில்.,. மனோஜ் குமாருக்கும் – சித்திர வள்ளிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த பழக்கமானது இவர்களுக்குள் தகாத உறவாக மாறவே., இருவரும் அடிக்கடி உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர். இந்த நிலையில்., ஜீவானந்தம் என்ற சித்திர வள்ளியின் உறவினர்., சித்திர வள்ளியை தேடி மனோஜின் உறவினர் இல்லத்திற்கு வரவே., இருவரின் நெருக்கத்தை அறிந்து கொண்டுள்ளார்.

இந்த விஷயத்தை உபயோகம் செய்து கொள்ள நினைத்த ஜீவானந்தம்., மனோஜ் குமாரை மிரட்டி ரூ.20 ஆயிரம் ரொக்கம் மற்றும் ரூ.2 இலட்சத்திற்கான காசோலையை பெற்று கொண்டு., சித்திர வள்ளியை அழைத்த சென்றுள்ளார்.

இந்த நேரத்தில் கடந்த புதன்கிழமையன்று மனோஜை தொடர்பு கொண்ட சித்திரவள்ளி., ரூ.1 இலட்சம் அவசரமாக வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட மனோஜ் பணம் இல்லை என்று கூறவே., உல்லாசமாக இருந்த வீடியோ காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும்., பணம் தரவில்லை என்றால் இணையத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே., இது குறித்த வழக்குப்பதிவை ஏற்ற காவல் துறையினர்., சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தகவலை அறிந்த சித்திர வள்ளி மற்றும் ஜீவானந்தம் தலைமறைவாகியுள்ளதால்., இவர்கள் இருவரையும் காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.