திருமணமான ஒரு நாளில் மனைவி வேறு நபருடன் ஓட்டம் பிடித்த நிலையில் பொலிசார் இதை கடத்தல் வழக்காக பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூரை சேர்ந்த இளைஞருக்கும், இளம் பெண்ணுக்கும் கடந்த திங்கட்கிழமை திருமணம் நடந்தது.
இதையடுத்து நேற்று கணவனும், மனைவியும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரில் வந்த இன்னொரு கார் புதுமண தம்பதியின் கார் மீது மோதியது.
பின்னர் காரில் இருந்து இறங்கிய சில நபர்கள், தம்பதி இருந்த காரின் கதவை திறந்து புதுமாப்பிள்ளையை கீழே தள்ளி அடித்து உதைத்தனர்.
இதையடுத்து புதுப்பெண்ணை தங்கள் காரில் ஏற்றி கொண்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.
அடிப்பட்ட புதுமாப்பிள்ளை இது குறித்து பொலிசில் புகார் அளித்தார்.
விசாரணையில் பெண்ணை அழைத்து கொண்டு போனது பிரயக் ஜின்கர் என்ற இளைஞர் மற்றும் அவர் நண்பர்கள் என தெரிந்தது.
ஜின்கர் காரில் அழைத்து சென்ற புதுப்பெண்ணுடன் அவருக்கு முன்னர் காதல் இருந்தது தெரியவந்தது.
மேலும் ஜின்கர், புதுமாப்பிள்ளையின் வீட்டருகில் தான் வசிக்கிறார் என்றும் தெரியவந்தது.
ஜின்கருடன் புதுப்பெண் விரும்பி சென்றார் என கூறப்படும் நிலையில் இதை கடத்தல் வழக்காகவே பொலிசார் பதிவு செய்துள்ளனர்.
திருமணமான 1 நாளில் மனைவி ஓடிபோனதோடு, காயமும் அடைந்துள்ள புதுமாப்பிள்ளை அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாத நிலையில் அவர் குடும்பத்தார் மிகவும் வேதனை அடைந்துள்ளனர்.