வாரத்திற்கு ஒரு முறை எள்ளுத் துவையலை அரைத்து சாப்பிட்டால் உடலில் உள்ள சூடு தணிந்து., கெட்ட கொழுப்புகள் கரைக்கப்பட்டு உடல் நலமானது பாதுகாக்கப்படும்.
செய்யத்தேவையான பொருட்கள்:
எள்ளு – 200 கிராம்.,
உப்பு – தேவையான அளவு.,
பச்சை மிளகாய் – இரண்டு அல்லது 3 காரத்திற்கேற்ப
புளி – சிறிதளவு.,
வெள்ளை பூடு – 6 பற்கள்.,
தேங்காய் – அரை முறி
கருவேப்பில்லை – தேவையான அளவு.
எள்ளு துவையல் செய்யும் முறை:
முதலில் எள்ளை எடுத்துக்கொண்டு., வானொலியில் போட்டு மிதமான சூட்டில் வறுத்து எடுக்கவும். வறுத்தெடுத்த எள்ளை மிக்ஸியில் போட்டு மையாக அரைத்து கொள்ளவும்.
பின்னர் எடுத்துக்கொண்ட பச்சை மிளகாய்., தேங்காய் மற்றும் வெள்ளைப்பூண்டை சிறிதாக நறுக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் பச்சைமிளகாய்., புளி., வெள்ளைப்பூண்டு மற்றும் தேங்காயை நன்றாக அரைத்து கொள்ளவும்., அரைக்கும் போது அதிகளவு தண்ணீர் ஊற்றினால் எள்ளு துவையலின் சுவை குறைய வாய்ப்புள்ளது., இதனால் குறைவான அளவு நீரை ஊற்றவேண்டும்.
இதற்கு பின்னர் அரைத்து கொண்ட எள்ளை அந்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கிளறி சூடான சாப்பாடுக்கு அல்லது பழைய சாதத்திற்கு சாப்பிடலாம்.