கணவனை கொன்று, தலையை முறித்து சாக்கிற்குள் அடைத்த ஆசைமனைவி.!

நெல்லித்தோப்பு வினோபா தெருவைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன், இவர் லாரி ஓட்டுனராக உள்ளார். இவரது மனைவி ஸ்டெல்லா. இந்நிலையில் குடிபழக்கத்திற்கு அடிமையான கமலக்கண்ணன் அடிக்கடி குடித்து விட்டு வந்து தனது மனைவிக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் இது போலவே குடித்துவிட்டு கமலக்கண்ணன் சமீபத்தில் ஸ்டெல்லாவிடம் தகராறு செய்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த அவர் கமலக்கண்ணனை அடித்து கீழே தள்ளியுள்ளார். அப்பொழுது கமலக்கண்ணன் தலை சுவற்றில் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்நிலையில் அதிர்ச்சியடைந்த ஸ்டெல்லா தான் செய்த கொலையை மறைக்க தனது சகோதரி ஜெரினாவிடம் உதவி கேட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து ஜெரினா தனது ஆண் நண்பர் தமிழ் மணி என்பவரை ஸ்டெல்லாவிற்கு உதவியாக அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் அவர்கள் இருவரும் ஒரு சாக்கு மூட்டைக்குள் சடலத்தை போட்டு அடைத்துள்ளனர். ஆனால் கமலக்கண்ணனின் தலை அடைக்க முடியாததால் அதனை காலால் மிதித்து மூட்டைக்குள் அடைத்துள்ளனர். பின்னர் இருசக்கர வாகனத்தில் சென்று ஆள் நடமாட்டமில்லாத கழிவுநீர் கால்வாயில் சடலத்தை வீசியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஒன்றும் தெரியாதது போல அனைவரிடமும் நாடகம் ஆடியுள்ளார் இதனை தொடர்ந்து புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சந்தேகப்படும் வகையில் சாக்கு மூட்டை ஒன்று இருப்பதை அறிந்த போலீசார்கள் அதனை மீட்டு ஆராய்ந்தபோது அதில் சடலம் இருந்துள்ளது,

அதனை தொடர்ந்து அவரது ஸ்டெல்லாவிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் குடிபோதையில் கால்வாயில் விழுந்து இருந்திருப்பார் என்று முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார்
இந்நிலையில் பிரேத பரிசோதனையில் தலையில் அடிபட்டு உயிரிழந்ததாகவும் கால்களால் அவரது முகம் கால்களால் மிதிக்கபத்திருப்பதாகவும் தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஸ்டெல்லா தான்தான் கொலை செய்தேன் என்பதை ஒப்புக்கொண்டார். அதனைத் தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஸ்டெல்லா அவரது அக்கா ஜெரினா மற்றும் தமிழ்மணி ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.