தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் பகுதியை சார்ந்தவர் முனுசாமி (வயது 25). இவர் கோயம்புத்தூர் பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில்., கடந்த 1 ம் தேதியன்று அவரது உறவினரின் 15 வயதுடைய பெண்ணை அழைத்து கொண்டு ஒகேனக்கல் பகுதிக்கு சென்ற சமயத்தில்., மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சுமார் 7 தனிப்படையை அமைத்து கொலையாளியை தேடி வந்த நிலையில்., அங்குள்ள வனவிலங்கு வேட்டைக்காரர்கள் சுமார் 8 பேரை கைது செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில்., ஒகேனக்கல் இருளர் காலனியை சார்ந்த வேட்டைக்காரன் செல்வம் (வயது 45) என்பவரின் மீது காவல் துறையினர் சந்தேகித்தனர்.
இதனையடுத்து சுமார் 7 தனிப்படைகள் மூலமாக அங்குள்ள வனப்பகுதியில் தீவிரமாக தேடி வந்த நிலையில்., நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். இது தொடர்பான விசாரணையை மேற்கொண்ட காவல் துறையினர்., கொலையாளி செல்வம் கூறியதை கேட்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளானார்கள். இது தொடர்பான விசாரணையில் செல்வம் தெரிவித்தாவது.,
சம்பவம் நடைபெற்ற கடந்த 1 ம் தேதியன்று வனப்பகுதியில் வேட்டைக்கு சென்ற சமயத்தில்., காதல் ஜோடி ஒன்று அந்த இடத்தில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தனர். அவர்களிடம் இந்த இடத்தில் இருக்காதீர்கள் என்று எச்சரித்த சமயத்தில்., வாலிபருக்கும் எனக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறை அடுத்து ஆத்திரமடைந்த நான் அந்த வாலிபரை கொலை செய்தேன்.
ஆத்திரத்தில் அவரை கொலை செய்து விட்டு காவல் துறையினரிடம் சிக்கிவிடுவோம் என்ற அச்சத்தில் வனப்பகுதிக்கு உள்ளே நுழைந்தேன்., சுமார் ஆறு நாட்கள் அங்குள்ள காட்டுப்பகுதியில் உணவில்லாமல் சுற்றி திரிந்த நிலையில்., ஏழாவது நாளில் பசியோடு செய்வதறியாது இருந்த என்னை காவல் துறையினர் கைது செய்தனர் என்று தெரிவித்துள்ளார். இது தொடர்பான விசாரணையில் காவல் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.