ஐ.எஸ். தீவிரவாதிககளிற்கு மைத்திரி பகிரங்க சவால்!

உலகின் சக்தி வாய்ந்த நாடுகளில் நேருக்கு நேராக தாக்குதல் நடத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகளுக்கு தைரியமுண்டா என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை தாக்குதல் குறித்து சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் இலங்கை மீது தாக்குதல்கள் மேற்கொள்வதற்கான காரணத்தை அறிந்துகொள்ள முடியவில்லையென தெரிவித்துள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் அமைப்பு தற்பொழுதும் உயிர்ப்புடன் இருக்கின்றதென்பதை உலகுக்கு காட்டவே அண்மையில் சமாதானத்தை கட்டியெழுப்ப இலங்கையை அவர்கள் தெரிவு செய்திருக்கலாமென தெரிவித்துள்ளார்.

உளவுத்துறைக்கு தாக்குதல்கள் குறித்த தகவல்கள் வந்தமை உண்மை என்றும் எனினும் அவர்கள் தனது கவத்திற்கு அதனை கொண்டுவராது அவர்களும் அலட்சியமாக செயற்பட்டுவிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

அதனாலே அவர்களின் பதவி பறிக்கப்பட்டதுடன் இந்த விடயம் தொடர்பாக ஆராய குழுவொன்றையும் அமைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.