ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹாம் சிறிசேனவின் திருமணம் நாளைய தினம் இடம்பெறவுள்ளது.
குறித்த திருமணம் கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் நடத்த மிகவும் பிரமாண்டமான முறையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடத்தப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல் காரணமாக ஷங்கிரிலா ஹோட்டல் மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருமண வைபவம் ஹில்டன் ஹோட்டலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய இந்த திருமணம் நாளைய தினம் கொழும்பு ஹில்டன் ஹோட்டடலில் இடம்பெறவுள்ளது.
பிரபல வர்த்தகரான அத்துல வீரரத்னின் மகளான நிபுனி வீரரத்னவை தஹாம் சிறிசேன திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.