14 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 62 வயதான உறவினர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேற்படி சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பாதிக்கப்பட்ட குறித்த சிறுமி தனது தாய் மற்றும் சகோதரனுடன் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் சம்பவ தினம் தாய் வேலைக்குச் சென்றிருந்ததாகவும், சந்தேக நபரான பாட்டனின் மனைவி சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்நிலையில் அன்றிரவு பாதிக்கப்பட்ட சிறுமி உறங்கச் சென்ற வேளையில் அச்சிறுமியை குறித்த சந்தேக நபரான பாட்டன் முறையானவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனை அவதானித்த சிறுமியின் சகோதரன் அயலவர்களிடம் கூறி பொலிஸாருக்கு தகவல் வழங்கியதால் குறித்த பாட்டனைக் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட சிறுமி பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குளியாபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.