நடிகர் பார்த்திபன் மீது பொலிசில் பரபரப்பு புகார்!

பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் தன்னை கொலை செய்ய முயற்சிப்பதாக நுங்கம்பாக்கம் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் அவரிடம் பாடல் ஆசிரியராகவும், உதவியாளராகவும் பணியாற்றி வரும் ஜெயங்கொண்டான் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருவான்மியூரில் உள்ள நடிகர் பார்த்திபன் வீட்டில் நகைகள் காணாமல் போனதாக நடிகர் பார்த்திபன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

அப்போது அவருடன் உதவி இயக்குநராக இருந்த சிலரையும், உடன் வேலை பார்த்த பெண் உதவியாளர்கள் ஆகியோரை பொலிசார் விசாரணை செய்துள்ளனர். பின்பு சம்பந்தப்பட்ட உதவி இயக்குனர்கள் உதவியாளர்களை நடிகர் பார்த்திபன் வேலையை விட்டு நீக்கியுள்ளார்.

இருப்பினும் அப்போதிலிருந்தே ஜெயங்கொண்டான் நடிகர் பார்த்திபனுக்கு உதவியாளராக இருந்து வருகிறார். இந்நிலையில், வேலை காரணமாக நகை திருடு போன விவகாரத்தில், வேலையில் இருந்து நீக்கப்பட்ட சிலரிடம் உதவியாளர் ஜெயங்கொண்டான் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதை தவறாக புரிந்து கொண்டு நடிகர் பார்த்திபன், தன்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அலுவலகத்திற்கு வர வைத்து தாக்கியதாக சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் ஜெயங்கொண்டான் புகார் அளித்துள்ளார்.