தூங்கி கொண்டிருந்த அழகிய இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞர்.. சிக்க வைக்க அப்பெண் செய்த அதிரடி செயல்

பிரித்தானியாவில் தூங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவை சேர்ந்தவர் ஹைடன் டேவிஸ் (23). இவரும் பெய்லி ரீக்ஸ் (21) என்ற இளம் பெண்ணும் கடந்த 2017-ல் காதலித்து வந்தனர்.

இந்நிலையில் அந்த ஆண்டு ஜூலை மாதத்தில் பெய்லி தனது வீட்டில் இரவு அயர்ந்து தூங்கி கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஹைடன் தூங்கி கொண்டிருந்த பெய்லியை பலாத்காரம் செய்துள்ளார். இதன் பின்னர் கண்விழித்த பெய்லி தனக்கு நேர்ந்த கொடூரத்தை உணர்ந்து அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து ஹைடன் மீது ஆத்திரம் கொண்ட பெய்லி அவரை பொலிசில் சிக்க வைக்க நினைத்தார்.

ஆனால் அதற்கான சரியான ஆதாரம் அவரிடம் இல்லாத நிலையில் சில நாட்கள் கழித்து ஹைடனை தான் செய்த தவறு குறித்து பேச வைத்து அதை பதிவு செய்ய முடிவெடுத்தார் பெய்லி.

அதற்கான தகுந்த நேரம் வந்த போது பதிவு செய்தார், அப்போது ஹைடன் கூறுகையில், நான் ஏன் இவ்வாறு உன்னிடம் நடந்து கொண்டேன் என எனக்கு தெரியவில்லை. என்னிடம் அதற்கான விளக்கமும் இல்லை.

நான் உன்னை பலாத்காரம் செய்தது தவறு என கூறினார்.

இந்த பதிவை பெய்லி பொலிசில் ஆதாரமாக கொடுத்த நிலையில் பொலிசார் ஹைடனை கைது செய்தனர்.

அவர் மீதான வழக்கு தொடர்ந்து Newcastle நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நீதிபதி கூறுகையில், ஹைடன் மீது பெய்லி வைத்திருந்த நம்பிக்கைக்கு அவர் துரோகம் செய்துவிட்டார்.

இவ்வழக்கில் ஹைடனுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குவதோடு பாலியல் குற்றவாளிகள் பதிவேட்டில் கையெழுத்திடவும் உத்தரவிடுகிறேன்.

இதோடு பத்து ஆண்டுகளுக்கு பெய்லியுடன் ஹைடன் எந்தவொரு தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.