விமானத்தில் இங்கிலாந்து பெண்ணுக்கு இந்தியரால் நடந்த கொடுமை!

இங்கிலாந்து சென்று கொண்டிருந்த போது விமானத்தில் உறங்கி கொண்டிருந்த இளம்பெண்ணை துஸ்பிரயோகம் செய்த இந்தியருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஹர்தீப் சிங் என்கிற இளைஞர், 6 மாத விசாவில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கிலாந்திற்கு புறப்பட்டார்.

மும்பையிலிருந்து மான்செஸ்டர் நோக்கி புறப்பட்ட அந்த விமானத்தில் அவருக்கு அருகே அமர்ந்திருந்த இங்கிலாந்தை சேர்ந்த 20 வயதான இளம்பெண்ணிடம் தொடர்ந்து பேச்சுக்கொடுக்க முயற்சித்துள்ளார்.

ஆனால் அந்த பெண் பேச மறுத்துள்ளார். அதன்பிறகும் கூட இளம்பெண்ணை தொந்தரவு செய்துகொண்டே இருந்த ஹர்தீப் சிங், விமானத்தில் விளக்குகள் சிறிது அணைக்கப்பட்டதும் அத்துமீற ஆரம்பித்துள்ளார்.

இடையில் விழித்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்த இளம்பெண் உடனடியாக அங்கிருந்த விமான பணிப்பெண்ணிடம் புகார் கூறியுள்ளார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில், விமான நிலையத்தில் வைத்து ஹர்தீப் சிங்கை பொலிஸார் கைது செய்தனர்,

இந்த நிலையில் வழக்கினை விசாரித்த நீதிபதி, குற்றவாளிக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், தண்டனை காலம் முடிந்த பிறகு ஹர்தீப் சிங் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார் எனவும் கூறி உத்தரவிட்டார்.