ஆக்டோபஸை உயிருடன் சாப்பிட முயன்ற இளம்பெண்.!

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் “seaside girl Little Seven” என்ற பெயரில் உணவு சாப்பிடுவது தொடர்பான பலவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ஆக்டோபஸ் உயிரினத்தை உயிருடன் சாப்பிட விரும்புவதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பொழுது ஆக்டோபஸ் பெண்ணின் முகத்தை தனது கால்களால் இறுக்கமாக பிடித்துக்கொண்டுள்ளது.

இந்நிலையில் அந்த பெண் முதலில் ஆக்டோபஸின் கால்களை எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அது முகத்தில் இறுக்கமாக ஒட்டியிருந்த நிலையில் மிகவும் சிரமப்பட்டு விடுவிக்க முயற்சி செய்கிறார்.பின்னர் சிறிது நேரத்தில் வலி தாங்க முடியாமல் கதறி துடிக்கிறார்.

இறுதியில் ஆக்டோபஸை முகத்திலிருந்து இழுத்து எடுத்த அந்த பெண், தனது முகத்திலிருந்து வரும் இரத்தத்தை கண்டு பெரும் அதிர்ச்சி அடைகிறார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.