அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் கேள்வி விசாரணைக்காக, பெங்களூரு சிறையில் உள்ள வி.கே.சசிகலாவை வரும் 13 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த சிறை அதிகாரிகளுக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஜெஜெ டிவிக்கு வெளிநாட் டில் இருந்து உபகரணங்கள் வாங்கி யதில் அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக வி.கே.சசிகலா, அவரது உறவினர் பாஸ்கரன் மற்றும் ஜெஜெ டிவி நிர்வாகம் மீது அமலாக்கத் துறையினர் கடந்த 1996-ல் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை எழும்பூர் முதலாவது பொரு ளாதார குற்றவியல் நீதிமன் றத்தில் நடந்து வருகிறது. இதில், சசிகலாவுக்கு எதிராக காணொலி காட்சி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப் பட்டது.
இந்த வழக்கில் சாட்சி விசாரணை முடிவடைந்துள்ளது. இந்நிலையில், கேள்வி விசாரணைக் காக சசிகலாவை வரும் 13 ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று பெங்களூரு சிறைத் துறைக்கு எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மலர்மதி உத்தரவிட்டிருந்த நிலையில், வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சசிகலாவுக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதியின் கேள்விகளுக்கு பதிலளிக்க சசிகலாவை மே 13ம் தேதி ஆஜர்படுத்த எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த ஆணையை எதிர்த்த மனு மீது உயர்நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பதிவு செய்யப்படும் பதில்கள் அடங்கிய ஆவணங்களை, பெங்களூரு சிறைக்கு அனுப்பி சசிகலாவின் கையெழுத்தை பெறவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.