அதிபயங்கர நிலநடுக்கம்.! அலறியடித்து வெளியேறிய பொதுமக்கள்.!!

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியுஷா தீவில் சக்திவாய்ந்த பயங்கரமான இரு நிலநடுக்கம் ஏற்பட்டது

ஜப்பானின் தெற்கு கடற்கரை பகுதியான கியூஷு தீவில் தென் கிழக்கே உள்ள மியாசக்கி ஷூகி என்ற இடத்தை மையமாக கொண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கு கடலுக்கு அடியில் 24 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவு கோலில் 5.6 ஆக பதிவானது.

அதேபோல் மீண்டும் ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதே இடத்தில் கடலுக்கு அடியில் 44 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.3 ஆக பதிவானது. இந்த தகவலை அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இந்த இரு நிலநடுக்கங்களால் கட்டங்கள் பெருமளவில் அதிர்ந்துள்ளது. இதனால் அலறியடித்துக்கொண்டு மக்கள் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். ஆனால் இதுவரை உயிர்சேதம் ஏற்பட்டதாகவும் தகவல் வெளிவரவில்லை.மேலும் சுனாமி ஏற்படும் அபாயம் ஏதும் இல்லை எனவும் புவியியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.