சமையல் சரியில்லை என்று கூறிய கணவனுக்கு இறுதியில் நேர்ந்த பரிதாபம்.!!

இன்றுள்ள காலத்தில் திருமணம் முடிந்த ஆண்கள் தங்களின் மனைவியுடன் முடிந்தளவு அமைதியாக அவர்களுக்கு பணிய வேண்டிய இடத்தில் பணிந்து., அவர்களை கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும் அன்பாக இருப்பது நல்லது.

தேவையற்ற வீண் சண்டைகளால் அல்லது பேச்சுக்களால் உங்களின் மனைவி பத்ரகாளியாக மாறி உங்களை புலந்து இரத்த வெள்ளத்தில் துடிதுடிக்க ஓடவிட்டு விடுவார். இதனை போன்ற சம்பவமானது தற்போது சென்னையில் நடந்துள்ளது.

சென்னையில் உள்ள அயனாவரம் பொண்ணுவேல்புரம் பகுதியில் வசித்து வருபவர் கார்த்தி. இவர் கட்டிட மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் தனலட்சுமி. இவர்கள் இருவரும் வீட்டில் வசித்து வந்தனர்.

இந்த நிலையில்., இதே பகுதியில் தனலட்சுமியின் சித்தி பழக்கடை நடத்தி வந்த நிலையில்., சித்தியின் பழக்கடைக்கு தினமும் சென்று வெட்டி பேச்சு பேசும் வழக்கத்தை தனலட்சுமி வைத்துள்ளார்.

இதன் காரணமாக வீட்டில் சமைக்காமல் இருந்து வந்த நிலையில்., அவ்வப்போது மட்டும் சமைத்து கணவருக்கு உணவுகளை வழங்கி வந்துள்ளார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நேரத்தில் நேற்று தனலட்சுமி சமையல் செய்து வைக்கவே., இதனை சாப்பிட்ட கார்த்திக் சமையல் ருசியாக இல்லை என்றும்., நல்ல ருசியுடன் சமைக்குமாறும் கூறியுள்ளார். இதனை கேட்டு ஆத்திரமடைந்த இருவரும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த சமயத்தில் தனலட்சுமியின் சித்தி வருகை தரவே., வீட்டில் இருந்த சமையல் கரண்டியை எடுத்து தனது கணவனை புரட்டி எடுத்துள்ளார். இவர் அடித்ததில் வலி தாங்க முடியால் கதறி., வீட்டை விட்டு வெளியேறியும் ஆத்திரம் தீராத தனலட்சுமி., நடு வீதியிலே கணவரை புரட்டி எடுத்தார்.

மனைவி தன்னை அடித்த துயரத்தில் இருந்த கார்த்திக் கண்ணீருடன் அங்குள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். இவரின் புகாரை ஏற்ற காவல் துறையினர் இருவரின் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.