பிலிப்பைன்ஸ் நாட்டில் வரும் 13ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு கட்சியினரும் வெற்றி பெறுவதற்காக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ துதர்தே தனது கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாடு முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் ரோட்ரிகோ துதர்தே சமீபத்தில் போஹால் என்னும் இடத்தில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இப்பொழுது அவர் தனது எதிர்கட்சிகள் குறித்து மிகவும் ஆவேசமாக பேசிக் கொண்டிருந்த போது அவரது வலது தோள்பட்டையின் மீது கரப்பான் பூச்சி ஒன்று வந்து அமர்ந்தது.
இதனை கண்டதும் அதிபரின் பெண் உதவியாளர் தன் கையில் வைத்திருந்த காகிதத்தால் கரப்பான் பூச்சியை விரட்ட பெருமளவில் முயற்சி மேற்கொண்டார்.ஆனால் அது கீழே விழாமல், அவரது மேலேயே அங்கும் இங்கும் ஓடி ஆட்டம் காட்டியுள்ளது.
பின்பு உதவியாளர் மீண்டும் முயற்சி செய்து கொண்டே இருந்த நிலையில், ரோட்ரிகோ துதர்தே கரப்பான் பூச்சியை தனது கைகளால் கீழே தட்டி விட்டார். பின்னர் அதனை தொடர்ந்து பேச துவங்கிய அவர் இது எதிர்க்கட்சிகளின் சதி என நகைச்சுவையாக பேசியுள்ளார். இதனை கேட்ட அவரது கட்சித் தொண்டர்கள் மற்றும் மக்கள் சிரிப்பில் மூழ்கினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.