சென்னை பெரம்பூர் அருகே திரு.வி.க. நகரை சேர்ந்த 16 வயது சிறுமி கடந்த மாதம் 14- ஆம் தேதி மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர், பல்வேறு இடங்களில் சிறுமியை தேடியுள்ள நிலையில் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
அவர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்தனர். இந்தநிலையில் சிறுமி, அரக்கோணத்தில் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அரக்கோணம் விரைந்த போலீசார், அங்கிருந்த சிறுமியை மீட்டு சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சென்னை தி.நகரை சேர்ந்த பெருமாள் என்ற இளைஞன் ஆசை வார்த்தை அரவிந்த் என்பவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து பெருமாள், அவருடைய நண்பர் அரவிந்த் இருவரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.