பரிசோதனையில் அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் ரகசியமாக செய்த நெகிழ்ச்சியான செயல்!!

வேல்ஸ் நாட்டில் வசித்து வந்தவர் ரோஸ். இவரது மனைவி மருத்துவர்கள்அவேன். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரச்சேல் மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பம் அடைந்துள்ளார்.

இந்த நிலையில் 6 மாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு வயிற்றில் ஏதோ ஒன்று குத்துவது போல அடிக்கடி ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் அதனால் அவருக்கு பயங்கர வலியும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்ற ரச்சேல் வயிற்றை மருத்துவர்கள் ஸ்கேன் செய்து பார்த்துள்ளனர். அப்பொழுது அவரது வயிற்றில் வினோதமான புற்றுநோய் கட்டி ஒன்று இருந்துள்ளது.இதனை கண்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து ரச்சேல் மற்றும் அவரது கணவர் ரோஸிடம் எதுவும் கூறாமல் இருந்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கூறினால் ரச்சேல் மிகவும் வருத்தப்படுவார்,பதற்றப்படுவார் என எண்ணிய மருத்துவர்கள் அவருக்கு புற்றுநோய் இருப்பது பற்றி கூறாமல் அறுவை சிகிச்சை செய்து புற்றுநோய் கட்டியை அகற்றினர்.

அதனை தொடர்ந்து அவருக்கு 41 வாரங்களுக்குப் பிறகு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர் குழந்தை பிறந்து நான்கு நாட்களுக்கு பிறகு மருத்துவர்கள் ரச்சேல் வயிற்றில் புற்றுநோய் கட்டி இறந்த தகவலை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ரச்சேல் தன்னையும் தனது குழந்தையும் எவ்வித பாதிப்பும் இல்லாமல் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் இச்சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.