பதவி வெறி பிடித்து அலையும் செந்தில்பாலாஜி இதுவரை 5 கட்சிக்கு மாறி விட்டார். இனி எந்த கட்சிக்கு போவாரோ தெரியவில்லை என்று அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார்.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி கரூர் ஒன்றியம், தோட்டக்குறிச்சி பகுதியில் அதிமுக வேட்பாளர் வி.வி.செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட போது பேசிய அவர், அரவக்குறிச்சி இடைத்தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடக்க கூடிய தேர்தல்.
2016 பொதுத் தேர்தலில் எதிர்க்கட்சி வேட்பாளர் செந்தில்பாலாஜி அரவக்குறிச்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
சில காரணங்களால் அந்த தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அதற்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் நாம் அனைவரும் பாடுபட்டு செந்தில்பாலாஜியை வெற்றி பெற செய்தோம்.
இதே தொகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டு வந்தவர் இப்போது உதய சூரியனுக்கு வாக்கு கேட்டு வந்து கொண்டிருக்கிறார்.
ஆரம்ப காலத்தில் இருந்து 5 கட்சிகளுக்கு தாவியவர் மீண்டும் எந்த கட்சிக்கு போவார் என்று தெரியவில்லை. நான்கரை ஆண்டு காலம் அம்மாவின் ஆட்சியில் அமைச்சராக இருந்தார். தொகுதி பக்கம் தலைகாட்ட வில்லை.
தான் மட்டும் தான் அமைச்சராக இருக்க வேண்டும் என்று நினைப்பவர். உடலில் உயிரும் உதிரமும் உள்ள வரை அம்மாவிற்கு விசுவாசமாக இருப்பேன் என்றவர் இப்போது எந்த முகத்தை வைத்துக் கொண்டு திமுகவிற்கு வாக்கு கேட்டு வருகிறார்’ என்று ககேள்வியெழுப்பி உள்ளார்.